Map Graph

பிலாசுபூர் வானூர்தி நிலையம்

இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் உள்ள வானூர்தி நிலையம்

பிலாசுபூர் வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: PAB, ஐசிஏஓ: VEBU) பிலாசா தேவி கெவத் விமான நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் பிலாசுப்பூருக்கு தெற்கே சாகர்பட்டாவில் 6.2 மி தொலைவில் அமைந்துள்ளது. இது இந்திய வானூர்தி நிலைய ஆணையத்திற்குச் சொந்தமானது. 1980களில், போபால் மற்றும் தில்லிக்கு விமான பயணங்களை மேற்கொள்ள இந்த விமான நிலையத்தை வாயுடூட் பயன்படுத்தியது. தற்போது விமான நிலையத்திலிருந்து வர்த்தக திட்டமிடப்பட்ட விமானம், தில்லி, ஜபல்பூர், பிரயாகராஜ் செல்லும் வழிகள் 2021 மார்ச் 1 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளன. ஜனவரி 27, 2021 அன்று பிலாசுபூர் விமான நிலையம் வணிக விமானங்களை இயக்குவதற்கான பொது விமான போக்குவரத்து இயக்குநரகத்திடமிருந்து (இந்தியா) வணிக உரிமத்தைப் பெற்றது. பிப்ரவரி 2, 2021 அன்று, மத்திய பொது விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, பிலாசுபூர் விமான நிலையத்திலிருந்து 2021 மார்ச் 1 முதல் பிரயாகராஜ், டெல்லி, போபால், ஜபல்பூர் வரை வணிக விமானச் சேவைகள் இயக்கப்படும் என்று அறிவித்தார்.

Read article